×

வனவிலங்கு மனித மோதலை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்-வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி பேரவை கூட்டத்தில் தீர்மானம்

பந்தலூர் : பந்தலூர் அருகே எருமாடு தனியார் மண்டபத்தில் வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி பேரவை கூட்டம் நடைப்பெற்றது. தமிழ்நாடு வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி ஆண்டு பேரவை கூட்டம் எருமாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைப்பெற்றது. செயலாளர் பத்மநாபன் மாஸ்டர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.பொருளாளர் கே.கே. வாசு வரவு செலவு கணக்கு வாசித்தார். கேரளா வயநாடு தலைவல் வாசு, செயலாளர் வேலாயுதன்,பொருளாளர் கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்கினர்.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. தலைவராக வேணுகோபால்,செயலாளராக சண்முகன்,பொருளாளராக சதீஷ், துணை தலைவராக விஜயன்,இணை செயலாளர்களாக பிரபாகரன், கோபிநாத் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து உயர்நிலை,மேல்நிலை கல்வியில் சாதித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரும்மாறு: நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் தாலுகாவில் வசித்துவரும் வயநாடன் செட்டி சமுதாயத்தினர் தனியார் வன பாதுகாப்பு சட்டப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதனை அரசு முறைப்படுத்த வேண்டும். கூட்டுபட்டாவிலுள்ள இறந்தவரின் பெயர் நீக்கம் செய்து தனிதனி பட்டாவாக வழங்க ஆவணம் செய்யவேண்டும்.
வயநாடன் செட்டி சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்து கல்வி,மற்றும் வேலைவாய்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், குடியிருப்புக்குள் வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தவேண்டும். மனித வனவிலங்கு மனித மோதலை தடுப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Forest department ,Wayanadan ,Chetty Service Society , Pandalur: Wayanadan Chetty Service Society council meeting was held at Erumadu Private Hall near Pandalur.
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...