மானாமதுரையில் நடைபெற்ற திருமணத்தில் வினோதம்: தங்கைக்கு வித்தியாசமாக சீர்வரிசை தந்த சகோதரர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தங்கையின் திருமணத்திற்கு ஜல்லிக்கட்டு காளை, சண்டைக்கிடா, சண்டைச் சேவல், கன்னிநாய்கள் என ஆசைப்பட்ட அனைத்தையும் அவரது அண்ணன் சீர்வரிசையாக வழங்கியது பலருடைய கவணத்தை ஈர்த்திருக்கிறது.

மானாமதுரையைச் சேர்ந்த சுரேஷ்- செல்வி தம்பதியின் மகள் விரேஷ்மா திருமணம் நேற்று நடைபெற்றது. அப்பொழுது விரேஷ்மா ஆசைப்பட்ட எல்லாவற்றையும் சீர்வரிசையாக வழங்க அவருடைய அண்ணன் முடிவு செய்தார். அதன்படி சிறுவயது முதல் விரேஷ்மா பாசத்துடன் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, சண்டைக்கிடா, சண்டைச் சேவல், கன்னிநாய்கள் ஆகியவற்றையும் சீர்வரிசையாக அவரது அண்ணன் வழங்கினார்.

தங்கை ஆசைப்பட்டது என அனைத்தையும் வழங்கியுள்ளார். அவற்றை மணமேடையில் ஏற்றி புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துக்கொண்டனர். இந்த வித்தியாசமான சீர்வரிசை எல்லா சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: