செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி..!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 5கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மதுராந்தகம் புறவழிச் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பின்னல் வந்த லாரி மோதியது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால், வாகனங்கள் சாலை நடுவே மோதி கொண்டதால் அதனை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார் விபத்துக்குளான வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.

பெருங்களத்தூரிலும் மழைக்கிடையே வெளியூர் சென்று திரும்பிய வாகனங்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வாரத்தின் முதல் நாள் என்பதாலும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் பணிக்கு செல்வோரின் வாகனங்களும் வரிசை கட்டி நின்றன. பள்ளிக்கரணை, மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 

Related Stories: