×

தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.2.96 கோடி வருவாய்

சென்னை:  தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் 2.96 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான வருமானம் குறித்து தென்காசி பாவூர்சத்திரத்தை சார்ந்த  சமூக ஆர்வலர்  பாண்டியராஜா என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தெற்கு ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அளித்த பதில்: அக்டோபர் 18 ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரயில்கள் இயக்கப்பட்டது. அதில், 19 ரயில்கள் தெற்கு ரயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரயில்வே எல்லைக்குள்  இயக்கப்பட்டது.

பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரயில்கள் இயக்கப்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. வருமானத்தை பொறுத்தவரை, மற்ற மண்டலங்கள் மூலமாக இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் 1 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அனைத்து ரயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக 2.96 கோடி வசூலாகி உள்ளது. இவ்வாறு ஆர்டிஐயில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 2.96 crore revenue from Diwali special trains
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...