பூபேந்திர பட்டேலுக்கு இபிஎஸ் வாழ்த்து

சென்னை: குஜராத் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள பூபேந்திர பட்டேலுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:  குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு என் பாராட்டுகள். இன்று (12ம் தேதி) காந்திநகரில் நடைபெறும் பதவியேற்பு விழா அழைப்பிதழ் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில முக்கிய பணிகள் காரணமாக இந்த பதவியேற்பு விழாவில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் முதல்வராக இருக்கும் காலத்தில் குஜராத் மாநிலம் தொடர்ந்து முன்னேறும் என உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துகள்.

Related Stories: