×

அரசு அலுவலர் பயிற்சிக்கு பட்டியல் அனுப்ப வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையரகம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: பவானிசாகர் அடிப்படையில் பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணிவரன் முறை செய்யப்பட்ட இளைநிலை உதவியாளர்கள் / நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களின் பெயர் பட்டியலை மட்டும் மாவட்ட அளவில் தொகுத்து பள்ளிக்கல்வி ஆணையர இணை இயக்குநர் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  அதேபோல் cosea4sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மாதம் அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Government ,Training ,School Education Commission , Govt to send list for training: Commissioner of School Education orders
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்