அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆடவர் கால்பந்து போட்டியில் ஏஎம்எஸ் இன்ஜி. கல்லூரி முதலிடம்

திருவள்ளூர்: சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆடவர் கால்பந்து போட்டி ஆவடி, வேல்டெக் ஹைடெக்  கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில், ஆவடி, முத்தா புதுப்பேட்டையில் உள்ள ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

  இதையடுத்து வெற்றி பெற்ற கல்லூரி அணிக்கு வேல்டெக் ஹைடெக் கல்லூரி முதல்வர் பரிசு, கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியின் போது கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வினோத் குமார் மற்றும் அணியின் கேப்டன் வாசிப் முக்தார் ஆகியோர் உடனிருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி செயலாளரும் தாளாளருமான எஸ்.சேகுஜமாலுதீன் மற்றும் முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: