தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை , புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சை,  ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: