சேலத்தில் போலி கூட்டுறவு சங்கம் தொடங்கி மோசடி; வங்கியாக இயங்கியது அம்பலம்

சேலம்: சேலத்தில் போலி கூட்டுறவு சங்கம் நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் முத்துவிஜயா, சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சூரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் மாவட்ட நெசவாளர் மற்றும் துணிநூல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் செயல்படுகிறது. அந்த சங்கம், கூட்டுறவுத்துறையின் அனுமதி ஏதும் பெறாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் போலியாக இயங்குகிறது.

அந்த சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக்கூறியிருந்தார். போலீசார் விசாரணையில், போலி கூட்டுறவு சங்கத்தை தொடங்கி 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயக்கி வந்ததும், கூடுதலாக ஆட்கள் தேர்வுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து, ஆள்எடுப்பு மேற்கொண்டதும் தெரியவந்தது. இந்த சங்கத்தில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்து பண வசூல் செய்து, வங்கியாக இயங்கச் செய்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories: