×

மாண்டஸ் புயல் எதிரொலி பால் விநியோகம் சீராக நடக்கிறதா?; அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக அம்பத்தூர் பால் பண்ணையில், பால் வினியோகம் சீராக நடைபெறுகிறதா என அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.
அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் இருந்து நாளொன்றுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 14 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் பால்பண்ணையில் அமைச்சர் சா.மு.நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போதிய ஊழியர்கள் பணியில் உள்ளார்களா, பால் வினியோகம் சீராக நடக்கிறதா என பார்வையிட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து 12 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வினியோகத்துக்கு அனுப்பப்பட்டது.

மீதமுள்ள 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி நடைபெற்று வருவதை அதிகாரிகளிடம் அமைச்சர் சா.மு.நாசர் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய 14 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவுடன் 28 லட்சம் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தற்போது 12 லட்சம் லிட்டர் பால் வினியோகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. பொதுவாக 33 வாகனங்கள் செல்ல வேண்டிய சூழலில், இதுவரை 21 வாகனங்கள் மட்டுமே சென்றுள்ளது. மீதமுள்ள 12 வாகனங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவிடும்’ என்றார்.

Tags : Mantus ,Minister ,S. M. Nassar , Mantus Storm Echo Is Milk Delivery Steady?; Minister S. M. Nassar study
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...