×

ஆரணியில் மாண்டஸ் தாக்கத்தால் நிலைகுலைந்த வாழை சாகுபடி: குலை தள்ளும் பருவத்தில் இருந்த 50,000 வாழை சேதம்.. விவசாயிகள் வேதனை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாண்டஸ் புயல் தாக்கத்தால் 500 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்தன. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமுற்றதால் 1 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் சூறை காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதில் ஆரணி அருகே சந்தவாசல், படவேடு, புஷ்பகிரி, வெள்ளூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றில் முறிந்தன.

சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 500 ஏக்கர் பரப்பளவில் இருந்த சுமார் 50,000 வாழை மரங்கள் சாய்ந்தன. குலை தள்ளக்கூடிய பருவத்தில் இருந்த வாழைகள் சேதமுற்றதால் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த வாழைக்கான இழப்பை வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டுகோள் விடுகின்றனர்.


Tags : Mandez ,Raini , Cultivation of Arani, Mandus, Banana
× RELATED மிரட்டல்களுக்கும்,...