மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என சென்னை காசிமேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: