×

சென்னையில் மாண்டஸ் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்..!!

சென்னை: சென்னையில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வங்கக் கடலில் நிலை சென்னையில் மாண்டஸ் புயல் புதுச்சேரி- மாமல்லபுரம்  இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்று மேற்கு நோக்கி புயல் நகர்ந்ததால் புதுச்சேரி-  மாமல்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தபோதும் சாலைகளில் பெரியளவில் தண்ணீர் தேங்கவில்லை.

மாண்டஸ் புயலால் நேற்று மாலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்தபோதும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அரும்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட சில இடங்களில் தேங்கிய தண்ணீர் உடனடியாக அகற்றப்படுகிறது. நாள் முழுவதும் மழை பெய்தபோதும் எந்த சுரங்கபாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னையில் மாண்டஸ் புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

திருவான்மியூரில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். அங்கு புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் ஸ்டாலின் வழங்கினார். வடசென்னை பகுதிகளிலும் ஆய்வு செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வர் உடன் செல்கின்றனர்.


Tags : CM ,Mandas ,Chennai ,G.K. STALIN , Chennai, Mandus Puyal, Principal M.K.Stalin, study
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...