அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜ வெற்றி பெறமுடியும்: செல்லூர் ராஜூ பேச்சு

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், பரவையில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கூற இயலாது.  குஜராத்தில் பாஜ வெற்றி என்பது, அது உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடியின் சொந்த ஊராகும். மேலும், பாஜ அங்கு ஆட்சியில் உள்ளது. இதனால், அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி சேர்ந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து தெரிய வரும்’’ என்றார். மதுரை - திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால்,  அப்பகுதியில் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர்.

Related Stories: