×

மாண்டஸ் புயல் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி: மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் தேனி கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகும் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்வரத்து சீராகும் வரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Gumbakkar ,Storm Mandus , Flooding at Kumbakarai Falls due to Cyclone Mandus: Bathing prohibited for tourists
× RELATED கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு கும்பக்கரையில் குளிக்கத் தடை