வங்கக்கடலில் தீவிர புயலான மாண்டஸ் புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: வங்கக்கடலில் தீவிர புயலான மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக மாறியது. மாண்டஸ் புயல் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகம் கடுமையான வானிலையை சந்திக்கக் கூடும் என்பதன் அறிகுறியாக 5ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இந்நிலையில் தீவிர புயலான மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக வலுவிழந்த போதும் அதி கனமழை, மிக கனமழை நீடிக்கும். மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. புயலாக புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: