×

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று 100 கனஅடி உபரிநீர் 12 மணிக்கு திறக்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

மாண்டாஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை மற்றும் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளம், ஆறு போன்ற இடங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி ஏரிகள் அதன் முழு கொள்ளளவை தாண்டி வருகிறது இதனால் ஏரிகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதனால் இன்று மதியம் 12 மணிக்கு 100 கன அடிநீர் முதற்கட்டமாக வெளியேற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மழை நின்றதால் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் மீண்டும் உபரி நீர் திறக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர். இதனால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Sembarambakkam ,Krat ,Burundi Lake , 100 cubic feet of surplus water will be released from Sembarambakkam, Puzhal, Poondi lake today at 12 noon: District Collector's announcement
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...