×

கிராமப்புறங்களில்தடை செய்யப்பட்ட சர்வே எண்களை பதிவு செய்ய தடை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி

சென்னை: கிராமப்புறங்களில் தடை செய்யப்பட்ட சர்வே எண்களை பதிவு செய்ய தடை விதிக்க மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அனைத்து மண்டல டிஐஜிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொதுமக்கள் ஆவணப்பதிவிற்கு ஆவணச்சுருக்கம் உள்ளீடு செய்யும் போது, பதிவிற்கு தடைசெய்யப்பட்ட சர்வே எண்களை உள்ளீடு செய்யும் போது, தன்னிச்சையாக தடைசெய்யும் வசதி தற்போது மென்பொருளில் கிராமப்புறங்களைப் பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் பதிவு செய்வதற்கு தடைசெய்யப்பட்ட நிலங்களைப் பொறுத்து சர்வே எண்களை உள்ளீடு செய்யும் போது, தடை செய்யப்பட்ட சர்வே எண்களை உள்ளீடு செய்ய இயலாதவாறு மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. சார்பதிவாளர்கள், மாவட்டப்பதிவாளர்கள், துணைப்பதிவுத்துறைத் தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அலுவலகங்களைப் பொறுத்து ”நில வகைப்பாடு மேப்பிங்” என்ற தெரிவில் சென்று தடைசெய்யப்பட்ட சர்வே எண் தொடர்பான கிராமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய வழிகாட்டி மதிப்புடன் கூடிய புதிய வகைப்பாட்டினை இணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், “ஆய்வுதிரை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வகைப்பாடு” என்ற தெரிவில் சென்று சம்பந்தப்பட்ட சர்வே எண்களை உள்ளீடு செய்து புதிய பூஜ்ஜிய வகைப்பாட்டினை இணைத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு இணைத்த பின்னர் தடைசெய்யப்பட்ட சர்வே எண்களுக்கு வழிகாட்டியில் பூஜ்ஜிய மதிப்பீடு உள்ளதா எனவும் ஆவணச்சுருக்கம் உள்ளீடு செய்வது முற்றிலும் தடுக்கப்படுகிறதா எனவும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தடை நீக்கம் செய்யப்பட்டு ஏதேனும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பின், சார்பதிவாளர் உள்ளீடு செய்த இனங்களுக்கு மாவட்டப்பதிவாளரும், இனங்களுக்கு மாவட்டப்பதிவாளர் உள்ளீடு செய்த துணைப்பதிவுத்துறைத்தலைவரும், துணைப்பதிவுத்துறைத்தலைவர் உள்ளீடு செய்த இனங்களைப் பொறுத்து பதிவுத்துறைத்தலைவரும் தங்கள் உள்நுழைவில் சென்று பதிவிற்கான தடையை விலக்கும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதனை கருத்தில் கொண்டு உரிய கருத்துருவினை தேவைப்படும் இனங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. பிஏசிஎல், கலைமகள் சபா நிலம் கையகப்படுத்த வருவாய்த்துறையினரால் அறிவிப்பு வெளியிடப்பட்ட இனங்கள் போன்றவை தொடர்பான சர்வே எண்களை தன்னிச்சையாக ஆவணப்பதிவிற்கு தடை செய்ய எதுவாக உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தனியாக பிறப்பிக்கப்படும், நகர்ப்புறங்களைப் பொறுத்து எனத்தெரிவிக்கப்படுகிறது.

Tags : Registration Department ,IG ,Shivan Arul , Ban on registration of survey numbers blocked in rural areas: Registration Department IG Shivan Arul action
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...