பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்

சென்னை: நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக இன்று (9ம் தேதி) முதல் 29.12.2022 வரை 20 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து  தண்ணீர் திறந்து விட கோரிய  கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று, இன்று காலை 8 மணி முதல் 29.12.2022 காலை 8 மணி வரை 20 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: