×

கடன் மோசடி வழக்கு சுரானா இயக்குனர் ஜாமீன் தள்ளுபடி

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் மொத்தமாக 4000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை என்று புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பும் வழக்கு தொடர்ந்தது.  

இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி சுரானா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான விஜயராஜ் சுரானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம் மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்களுடன் மனுதாரருக்கு தொடர்பில்லை என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கியிடம் கடன் பெற்ற மோசடியில் விஜயராஜ் சுரானாவிற்கு தொடர்புள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவருக்கு  ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால் தனக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென மனுதாரர் கோர முடியாது என்றார். இதனையடுத்து, விஜயராஜ் சுரானாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Surana ,Bail Waiver , Loan Fraud Case Surana Director Bail Waiver
× RELATED வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள்