×

கோயம்பேட்டில் முருங்கை ஒரு கிலோ ரூ.250க்கு விற்பனை

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. சாம்பல் நிற முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, சில்லரையில் விற்கும் பெண் வியாபாரிகள் கூறும்போது, ‘‘ஒரு வாரத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பச்சை நிற முருங்கைக்காய்  ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவால் இந்த முருங்கைகாய் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பல் நிற முருங்கைக்காய் விலை சற்று குறைந்து இருந்தாலும் அவற்றை வாங்கி சென்று கடைகளில் விற்பனை செய்தால் வியாபாரம் இல்லை. சாம்பல் நிறம் முருங்கைக்காயை யாரும் வாங்குவதில்லை’’ என்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு  ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம் பழம்  தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Moringa ,Coimbatore , Moringa is sold at Rs.250 per kg in Coimbatore
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...