×

துணிவு படத்திலிருந்து 2 பாடல்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி

சென்னை: அஜித்தின் துணிவு படத்தில் இருந்து 2 பாடல்கள் திருட்டுத்தனமாக லீக் செய்யப்பட்டது. அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம் துணிவு. வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள சில்லா சில்லா என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இது அஜித்தின் அறிமுக பாடலாக படத்தில் இடம்பெறுகிறது. இந்த பாடலை விரைவில் இணையதளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதேபோல், காசேதான் கடவுளடா என்ற பாடலை ஹிப்ஹாப் ஆதி பாடியிருந்தார்.

இந்த பாடலையும் சமீபத்தில்தான் பதிவு செய்தனர். இந்த இரண்டு பாடல்களுமே யாரும் எதிர்பாராத வகையில் இணையதளத்தில் திடீரென லீக் ஆனது. உடனே இது பரவ ஆரம்பித்துவிட்டது. உடனடியாக படக்குழுவினர் தொழில்நுட்ப டீமுடன் முயற்சி செய்து இணையதளத்திலிருந்து இந்த 2 பாடல்களையும் நீக்கினர். படக்குழுவை சேர்ந்த யாரோதான் இந்த பாடல்களை லீக் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க படக்குழு யோசித்துள்ளது.

Tags : 2 songs from Thadvu film leaked: Film crew shocked
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...