×

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023 ஆம் ஆண்டின் முதல் போக  நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை  மதகுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்பொழுது பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக 09.12.2022 முதல் 29.12.2022 வரை 20 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து  தண்ணீர் திறந்து விட கோரிய  கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று, 09.12.2022 காலை 8.00 மணி முதல்  29.12.2022  காலை 8.00 மணி வரை 20 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags : tamil nadu government ,bavanisagar dam , Tamil Nadu government orders to release water from Bhavanisagar dam
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்