×

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: குரோம்பேட்டையில் பரபரப்பு

தாம்பரம்: குரோம்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  பின்னர், தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாலிபர், தான் கொண்டு வந்த உடமைகள் அடங்கிய பையை பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அகிலன் (23) என்பதும், வேலை தேடி சென்னை வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் எந்த ஊரை சேர்ந்தவர், எங்கு தங்கியிருந்தார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார ரயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags : Crompettai , Teenager commits suicide by jumping in front of train: excitement in Crompettai
× RELATED சென்னை குரோம்பேட்டையில் வேன் டயர்...