×

இமாச்சலில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்?... பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டம்..!

டெல்லி: இமாச்சல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் குஜராத்தில் அபார வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் 27 தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதன் மூலம் இமாச்சலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், வெற்றிச் சான்றிதழை பெற்றதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சத்தீஸ்கர் அழைத்துச் செல்ல அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா, மத்திய பிரதேசத்தில் செய்தது போல காங். எம்.எல்.ஏ. க்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்கலாம். பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க வெற்றி வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை சண்டிகர் அழைத்து செல்கிறது.

Tags : Congress ,Himachal ,Chandigarh ,Bajaga , Congress is taking power in Himachal?... Plan to take winning candidates to Chandigarh to stop BJP's horse-trading..!
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...