×

நடுஹட்டி அருகே குடியிருப்பு நடுவே தவறி விழுந்த காட்டுமாடு

ஊட்டி: நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அளவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் கட்டபெட்டு வனச்சரகம், அளக்கரை அருகே நடுஹட்டி கிராமத்தை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் காட்டுமாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது காட்டு மாடு ஒன்று வீட்டின் பின்புறம் உள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது  நிலை தடுமாறி வீட்டிற்கும் தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து எங்கும் செல்ல வழி இல்லாமல் மாட்டிக் கொண்டு தவித்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து கட்டபெட்டு வனச்சரக வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு மாட்டினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர்  காட்டு மாடு செல்ல ஏதுவாக தடுப்பு சுவற்றினை உடைத்து வழி ஏற்படுத்தி பத்திரமாக மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Naduhatty , Naduhatti, in the middle of the settlement, a wild cow has fallen
× RELATED அடிப்படை வசதி இல்லாததால் புதிய ஹாடா கிராம குடியிருப்பு பகுதி மக்கள் அவதி