×

கனமழை பெய்தால் தமிழகத்தில் அதிகளவு மருத்துவ முகாம் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கனமழை பெய்தால் தமிழகம் முழுவதும் அதிகளவு மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் பட்டமேற்படிப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மேற்படிப்புக்கான வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் விஷ முறிவு கையேட்டை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:  இந்தியாவிலேயே முதல் முறையாக அவசர மருத்துவ சிகிச்சைக்கான துறை தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பு எம்.டி அவசர சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவ கல்வி எனும் புதிய பாட பிரிவு தொடங்கப்பட்டு 85 இடங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில ஒதுக்கீட்டில் 50 % இடங்கள் நிரப்பப்பட்பட்டு வருகிறது. இதற்காக, உலக வங்கி நிதி உதவியுடன் 100 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதன்முறையாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வு நிதி ஆயோக் அமைப்பால் பாராட்டப்பட்டுள்ளது.

1,340 வாகனங்கள் உயிர்காக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 300 வாகனங்கள் அதிநவீன கருவிகள் பொருந்திய வாகனங்களாக உள்ளது. எம்.ஆர்.பி. செவிலியர்களை வரன்முறை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நிதி ஆதரத்துக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில் வந்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களூககு ரெட் அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. பெருமழை பெய்தால் உடனே மருத்துவ முகாம்கள் அமைக்க துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian , If there is heavy rain, more medical camps will be set up in Tamil Nadu: Minister M. Subramanian informed
× RELATED தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி...