கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மரணம்: முதல்வர் இரங்கல்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மரணம் அடைந்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி, அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், நேற்று காலை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்தினேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: