ராஜஸ்தான் அமைச்சரின் ஆபாச வீடியோ வைரல்

ஜெய்ப்பூர்:  ராஜஸ்தான் சிறுபான்மையினர்நலத் துறை அமைச்சராக இருப்பவர் சலே முகமது. அரைகுறை ஆடையுடன் இருக்கும் ஒரு பெண்ணுடன் சலே முகமது பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இருவருக்கும் இடையேயான உரையாடல் தெளிவாக இல்லை. இந்த வீடியோ குறித்து ராஜஸ்தான் மாநில பாஜ கட்சி தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில பாஜ கட்சி டிவிட்டரில் பதிவிடுகையில், இதில் சம்மந்தப்பட்ட அமைச்சரை முதல்வர் அசோக் கெலாட் நீக்குவாரா? அல்லது வாக்கு வங்கி அரசியலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜ தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா டிவிட்டரில் பதிவிடுகையில், சலே முகமது முன்னாள் அமைச்சர் காஸி பக்கீரின் மகன். சலே முகமதுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: