×

நகராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் உடுமலையில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகள்

உடுமலை: நகராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் உடுமலையில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை  நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மற்றும் பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட  சிவலிங்கம் லேஅவுட் ஆகியவை நகராட்சி, ஊராட்சியின் எல்லை பகுதியாக உள்ளன. இப்பகுதியில்  நகராட்சி பகுதியில் இருந்தும், ஊராட்சி பகுதியில் இருந்தும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்  கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது.

இதன்  அருகே குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளன. மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்தும் அவை அகற்றப்படவில்லை. உடுமலை நகராட்சி, பெரிய கோட்டை ஊராட்சி எல்லை பிரச்னை காரணமாக குப்பைகளை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.  இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிபாக பள்ளிக்குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Udumalai , Garbage piled up like a mountain in Udumalai due to the issue of municipal and panchayat boundaries
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...