முதன்முறையாக கால்இறுதியில் மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுன்ட் ஆப் 16 சுற்றில் நேற்றுநடந்த போட்டியில் ஸ்பெயின் (6வது ரேங்க்), மொராக்கோ (22வது ரேங்க் ) அணிகள் மோதின.ஆட்ட நேர முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.

இதன்பின் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அணியும் கோல் அடிக்காததையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. வெற்றிக்கு மொராக்கோ கோல்கீப்பர் 31 வயதான யாசின் பவுனோ முக்கிய பங்கு வகித்தார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் 3 முறை பெனால்டி கோல்களை தடுத்து வெற்றிக்கு உதவியது அவர்தான். அவரை சக வீரர்கள் தூக்கிப்போட்டு கொண்டாடினர். நடப்பு உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற 2வது அணி மொராக்கோ. இந்த வெற்றி மூலம் நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி என்ற சிறப்பை மொராக்கோ பெற்றுள்ளது.

Related Stories: