மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுராந்தகம் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: