குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்த கூட்டத்தொடர்; பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் பிரதமர் மோடி செய்தியர்களுக்கு பேட்டியளித்தார். குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்த கூட்டத்தொடர் ஆகும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். ஜி - 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது என்று குறிப்பிட்டார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 29ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துகொண்டன. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத் தொடரில் 25 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், விலைவாசி உயர்வு, சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.

Related Stories: