×

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடதெற்கு திசையில் நகர்ந்து மாலையில் புயலாக வலுப்பெறும். புயலாக வலுப்பெற்று நாளை காலை வடதமிழகம் - புதுச்சேரியை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் கூறியுள்ளது. 


Tags : Bengal Sea ,Meteorological Center , The depression over Bay of Bengal has strengthened into a deep depression: Meteorological Department
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!