மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில், சென்னையை நோக்கி, திருச்சி-  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி சென்று கொண்டிருந்தது. இந்த டாட்டா ஏசி வாகனத்தில், 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.  இந்த டாட்டா ஏசி வாகனம் ஆனது, திடீரென  ஜானகிபுரம் பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி  மீது மோதியுள்ளது. டாட்டா ஏசி வாகனம் நொறுக்கியது.

இந்த கொடூர விபத்தில் மினி சரக்கு வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 நபர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு சென்று டாட்டா ஏசியில் திரும்பிய பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து  விபத்து குறித்தும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: