பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு சீன அரசு பணிந்தது.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்ப்படுகின்றன. இந்நிலையில், பீஜிங்கில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் நியூக்ளிக் அமில சோதனை செய்து கொள்ள தேவையில்லை என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.