×

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்ற 852 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் கூறினார். இதுகுறித்து மதுவிலக்கு ஆயதீர்வத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மதுபான (டாஸ்மாக்) கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாகவும், குளிரூட்டபட்ட மதுபானங்கள் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யபடுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அடிப்படையில் 2,822 பேர் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. 852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதே புகாருக்கு துணை போன 1,970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மாற்றப்பட்டு ள்ளனர். அவர்களிடம் இருந்து 4.61 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாக கூறி 798 எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tasmac ,Minister ,Senthil Balaji , 852 people who sold liquor at extra price suspended in Tasmac: Minister Senthil Balaji informed
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...