×

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் வந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம்: டக்ளஸ் தேவானந்தா பதிலால் சர்ச்சை

ராமேஸ்வரம்:  இலங்கையில் நேற்று நடந்த பாராளுமன்ற கேள்வி நேரத்தின் போது இலங்கை விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் எம்பி விஜித்த ஹேரத், ‘‘இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதில் கூறும்போது, ‘‘இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார். அதற்கேற்ப செயல்படுவேன்’’ என தெரிவித்துள்ளார். கடந்த 2015ல் மன்னாருக்கு வந்தபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Douglas Devananda , Power to open fire if Indian fishermen enter Sri Lankan waters: Controversy by Douglas Devananda's reply
× RELATED கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது...