×

ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவுடன்  அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் தலைமையிலான குழுவினர் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு  ஒப்பந்தங்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் இன்று  (06.12.2022) நடைபெற்றது.  

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க்  தலைமையிலான குழுவினர் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (Sister city affiliation) ஒப்பந்தங்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் இன்று (06.12.2022) நடைபெற்றது.   இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் விரிவாக எடுத்துரைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ மாநகரம் ஆகியவை சகோரத்துவ நகரங்களின் இணைப்பாக இரு மாநகர மக்களது ஆக்கப்பூர்வ உறவுகளை மேம்படுத்துவதுடன், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு குறித்து இரு மாநகரங்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத்திறம், பொருளாதாரம் ஆகியவைகளை மேலும் வளப்படுத்தும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி மேய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ நகரத்தின் மேயர் ஒத்துழைப்பு நல்கி செயல்படுவோம் எனத் தெரிவித்தனர்.  

இதனைத் தொடர்ந்து, மாமன்றக் கூட்டரங்கினை அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ நகரத்தின் மேயர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். மன்றக் கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய துணை மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதர் ஜுடித் ரவின், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (கணக்கு) க.தனசேகரன் மற்றும் துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், சான் ஆன்டோனியோ நகரத்தின் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags : Ribbon Building Partnership ,Chennai Corporation ,City ,San Antonio ,United States , Ribbon Building, Chennai Corporation, San Antonio, USA, Discussion
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...