×

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டம் பணி நிறைவின்போது ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில் இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டம் பணி நிறைவின்போது ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான மிக முக்கியதேவையான சிக்னல், இரயில் இயக்க கட்டுப்பாடு காணொளி மேலாண்மை அமைப்பு ஆகியவற்றிற்கு பாதுகாப்பு நிறைந்த அதிநவீன தொழில்நுட்பம் அவசியமாகிறது, இந்த அதிநவீன தொழில்நுட்ப பணிக்காக ரூ. 1620 கோடி நிதி மதிப்பில் பணி மேற்கொள்ளப்படும். இதற்காக ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய கூட்டமைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ரூ. 1620 கோடி மதிப்பிலான, சமிக்ஞை, இரயில் கட்டுப்பாடு மற்றும் காணொளி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து, உற்பத்தி செய்து, நிறுவி, சோதித்து செயல்படுத்துதல் குறித்த ஒப்பந்தப் புள்ளியை, ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புக்கு அளித்துள்ளது,

பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (Communication Based Train Control System), இரயிலை இயக்க ஓட்டுநர் தேவையின்றி தானாகவே இயங்க வழிவகுக்கிறது. இந்தச் சிறப்பான அமைப்பு, பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அளவை-4ன் படி உயரிய பாதுகாப்பு அளவினைக் கொண்ட தன்னிச்சையான பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்படும்.

ஓட்டுநர் இல்லா பயணிகள் இரயிலை இயக்குவதற்கான இந்த அமைப்பு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகளின்படி சோதனை மையத்தில் தீவிர பரிசோதனைக்கு உட்பட்டதாகும். வெற்றிகரமான பரிசோதனைகளுக்குப் பின்னர், இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இறுதியாக செயல்படுத்துதல் மற்றும் பயணிகரால் ளுடன் இயக்குதல் குறித்து, மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்படும்.

அனுமதி குறைந்தபட்ச இடைவெளியான 1 நிமிடம் 30 வினாடிகள் வினாடிகளில் ஆளில்லாமல் தானியங்கி முறையில் இரயில்களை இயக்க முடியும், ஓட்டுநர் இல்லாமல் இரயிலை தானியங்கி அடிப்படையில் இயக்கப்படுவதோடல்லாமல், பணிமனைக்குள் இரயில்கள் வந்து செல்வதும், நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணிகளுக்கான தகவல் மற்றும் காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த அமைப்பு, மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் இயக்கக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டுப்பாட்டு சமிக்ஞை ஆகியவற்றை உடன்நிகழ்வு நேரத்தின்படி காணொளியை காட்சிப்படுத்த வகை செய்கின்றது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Metro Railway , Chennai Metro Rail, Second Phase Work, Automatic Metro Rail Operation
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...