காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை பதக்கத்தை தந்தையின் சமாதியில் வைத்து அஞ்சலி

புதுக்கோட்டை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை நேற்று தனது தந்தையின் சமாதியில் பதக்கத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லமுத்து-ரீட்டா தம்பதி. இவர்களது மகள் லோக பிரியா(22). இவரது தந்தை இறந்தது தெரியாமல், காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் ஊர் திரும்பிய வீராங்கனை லோகபிரியா பதக்கத்தை தந்தை சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர் கூறியதாவது:

6ம் வகுப்பு முதல் பளுதூக்குதல் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாவட்டம், மாநிலம் போட்டிகளில் பரிசுகளை பெற்று வந்தேன். தற்போது நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதலில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றேன். இந்நிலையில் எனது தந்தை செல்வமுத்து திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார், பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் பெற்ற சந்தோசம் 5 நிமிடம் கூட எனக்கு இல்லை. தந்தை திடீர் மரணம் செய்தி கேட்டு கதறினேன். தங்கப்பதக்கம் பெற்றதை தனது தந்தைக்கு தெரிவிக்க முடியாமலும், தனது தந்தையின் முகத்தை  கடைசி வரை பார்க்க முடியாமலும் போய் விட்டது. அதனால் பதக்கத்தை தந்தையின் சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினேன் என்றார்.

Related Stories: