×

விழுப்புரத்தில் 493 மனுக்கள் குவிந்தன பொதுமக்கள் மனுக்கள் மீது குறுகிய காலத்தில் தீர்வு-அலுவலர்களுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவு

விழுப்புரம் : பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது  குறுகிய காலத்திற்குள் தீர்வு காண வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர்  மோகன் உத்தரவிட்டார்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்தது.  இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரர்கள்  முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது  உடனடியாக கவனம்எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டுமென  அலுவலர்களுக்கு ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற  குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் 493 மனுக்கள் குவிந்தன. முதியோர்  உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, தொழில் தொடங்க கடனுதவி,  பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள  அறிவுறுத்தினார். மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள்,  முதல்வரின் முகவரி திட்டமனுக்கள், அமைச்சர்களிடமிருந்து  பெறப்படும் மனுக்கள்மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்.

அப்போது மாவட்ட வருவாய்அலுவலர் பரமேஸ்வரி, ஊரகவளர்ச்சி முகமை திட்ட  கூடுதல் ஆட்சியர் சித்ராவிஜயன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியர்  விஸ்வநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, நிலஅளவைகள் உதவி இயக்குநர்  சீனுவாசன், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


Tags : Villupuram ,Collector ,Mohan , Villupuram: Collector Mohan has asked the officials to resolve the petitions submitted by the public within a short period of time
× RELATED காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக...