×

பொதுமக்கள் தங்கள் வீட்டு மின் மீட்டர்களை தனியார் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கலாம்: மின்வாரியம் அனுமதி

சென்னை: வீடு, தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மின் மீட்டர்கள் தாறுமாறாக ஓடி அதிக மின் கட்டணம் ஏற்படுதை தடுக்கவும், மின் மீட்டர் ஓடாமல் அல்லது பழுதடைந்து இருந்தாலோ, அதிக மின் அழுத்தத்தால் மின் மீட்டர் எரிவது போன்ற பிரச்னைகளை பொதுமக்களே களையும் வகையில், தனியார் ஆய்வகத்தில் மின் மீட்டர்களை கொண்டு பரிசோதனை பராமரிப்பு பணிகளை தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ளலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போதை நிலவரப்படி, பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் மின்வாரியத்துக்கு சொந்தமான மின்சாரத்தை கணக்கிடும் மீட்டர்களை மின்வாரியமே பரிசோதனை செய்து வருகிறது.

இருப்பினும், பல கோடி மின் இணைப்புகள் உள்ள தமிழகத்தில் மின்வாரிய பரிசோதனை கூடத்தில் மட்டுமே குறிப்பிட்ட கால கெடுவிற்குள் மின் மீட்டர்களை பரிசோதனை செய்து, அந்தந்த கோட்டத்துக்கு அனுப்பி வைப்பது சாத்தியமாகவில்லை. காரணம், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மின் மீட்டர்கள் பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால், அவை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு போய் சேர்வதில்லை. காரணம், மின் ஆய்வகம் பற்றாக்குறை. எனவே, பொதுமக்களின் மின்மீட்டர் தொடர்பான பிரச்னைகளை குறிப்பாக அதிகளவு மின்கட்டணம் வருவது, மின்மீட்டர் வேகமாக ஓடுவது, ஓடாமல் பழுதடைந்து நிற்பது மற்றும் உயர் அழுத்த மின்சாரத்தால் எரிந்து போவது போன்றவற்றால் ெபாதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக ரூ.300 மின்கட்டணம் வர வேண்டிய வீட்டில் 3000 ரூபாய் கட்டணமாக வருவதை குறிப்பிடலாம். எனவே, மின் மீட்டர் ஆய்வக சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மின்வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால், கடந்த 2ம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் தனியார் ஆய்வகங்கள் எவை, அது எங்கே இருக்கிறது, எந்தெந்த ஆய்வகத்திற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் எவை ஆகியவை குறித்த பட்டியலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மின் மீட்டர்களை பரிசோதிக்க விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும், இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரை கொண்டு சென்று ஆய்வு செய்தல், பழுது நீக்கிக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவீனங்களை மின்நுகர்வோரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Tags : Electricity Board , Public can get their household electricity meters tested by a private laboratory: Electricity Board approval
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி