×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி முர்மு சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு திருப்பதி வந்தார். இரவு திருமலையில் தங்கி நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார். அவரை திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா, துணை முதல்வர் நாராயணசாமி, ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி, அமைச்சர் ரோஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். தொடர்ந்து, லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர், அலிபிரியில் உள்ள கோ சப்த பிரதட்சண மந்திரத்தில் பார்வையிட்டு பசுவுக்கு பூஜை மேற்கொண்டு பசு எடைக்கு நிகரான 435 கிலோ தீவனங்களை காணிக்கையாக வழங்கினார். இதற்கான ரூ.6 ஆயிரம் தொகையை கோ பிரதட்சணம் மந்திர அதிகாரிகளிடம் வழங்கினார். தொடர்ந்து, பத்மாவதி பல்கலை மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார் பின்னர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து டெல்லி சென்றார். 24 மணிநேரம் காத்திருப்பு:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 80,001 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் சுமார் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் ெபற்ற பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Darshan ,President ,Murmu Swamy ,Seven Malayan Temple ,Tirupati , Darshan of President Murmu Swamy at the Seven Malayan Temple in Tirupati
× RELATED ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு