பட்டாக்கத்தியுடன் ரகளை ரவுடி சுற்றிவளைத்து கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் (38). இவர், அண்ணாநகர் 4வது மெயின் ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு, இவரது கடைக்கு போதையில் பட்டா கத்தியுடன் வந்த 5 பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், தர மறுத்ததால் சரமாரியாக தாக்கியதோடு, கத்தியால் வெட்ட முயன்றனர்.  பின்னர், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை வெட்ட முயன்றனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.  இதில் தொடர்புடைய ஒரு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் கத்தியுடன் ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சி சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: