×
Saravana Stores

லக்கிம்பூர் கலவர வழக்கு ஒன்றிய அமைச்சர் மகன் மனு டிஸ்மிஸ்

லக்கிம்பூர் கேரி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாயினர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மிஸ்ராவை போலீஸார் கைது செய்தனர். இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இந்த மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை மீண்டும் விசாரித்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஆசிஷ் உட்பட 13 பேர் லக்கிம்பூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகிறது.

Tags : Lakhimpur ,Riot ,Case ,Union ,Minister ,Magan Manu , Lakhimpur Riot Case Union Minister Magan Manu Dismissed
× RELATED வழிப்பறி வழக்கில் கைது செய்வதற்கு...