இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் செமேரு எரிமலையானது வெடித்து சிதறி நெரும்பு குழம்பையை வெளியேறி வருகின்றது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் லுமாஜங் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலையானது நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறிவருகின்றது. மேலும் சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலம் எழும்பியுள்ளது.

எரிமலை அருகே அமைந்திருந்த பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பள்ளிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் முதல் எரிமலையின் சீற்றம் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நேற்று பிற்பகல் வரை எந்த இறப்பு சம்பவங்களும் பதிவாகவில்லை. இதனிடையே லாவா குழம்பு பாய்ந்து வரும் பாதையில் உள்ள பெசக் கோபோகான் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரிலும் செமேரு எரிமலை வெடித்து சிதறிய போதும் 51 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: