×

மக்கள் போராட்டம் எதிரொலி; சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

பீஜிங்: சீனாவில் மக்கள் போராட்டங்களையடுத்து பீஜிங் உள்ளிட்ட நகரங்களில்  கொரோனா கட்டுப்பாடுகளை ஓரளவு சீனா தளர்த்தியுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல நகரங்களில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கடந்த மாதம் உரும்கி என்ற இடத்தில்  அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 10 பேர் பலியாயினர். ஊரடங்கு  கட்டுப்பாடுகளால் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள்  போராடினர். அதிபர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் தீவிரமடைந்தது.

இதையடுத்து சில  நகரங்களில்  சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அந்நாடு நேற்று அறிவித்துள்ளது. பீஜிங் மற்றும் இதர 16 நகரங்களில் கொரோனா சோதனை எதுவும் இன்றி மக்கள் பஸ்களில் பயணம் செய்யவும், சப்வேயில் நடப்பதற்கும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பீஜிங்கின் ரயில் நிலையங்கள்,  விமான நிலையங்களில் கொரோனா  சோதனையில் நெகடிவ் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குவாங்சோ மற்றும் தொற்று அதிகம் உள்ள நகரங்களில் கூடுதல் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : China , People's struggle echoes; China eases corona restrictions
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்