×

புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் இயக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மனவர்களுக்கான இலவச பேருந்துகளை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கான இலவச பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.  லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக 1 ரூபாயில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கான 1 ரூபாய் சிறப்பு பேருந்து தற்போது இலவச பேருந்தாக மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவையை  ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி, காரைக்காலில் 74 பேருந்துகள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இதில் 17 பேருந்துகள் காரைக்காலில் இயக்கப்படுகிறது எனவும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித் தனியாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy , Puducherry school students to be run separate free buses: Rangaswamy announced
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி