×

மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக்: வட்டாச்சியர் பணியிட மாற்றம்..!

மதுரை: மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக் ஆன விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாக மதுரை தெற்கு வட்டாச்சியர் கல்யாணசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கு நடந்த எழுத்துத் தேர்வில், ஒரு மையத்தில் வினாத்தாள், லீக் ஆனது. இதனால், மைய பொறுப்பாளரான தாசில்தார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மாவட்டத்தில், 209 கிராம உதவியாளர் காலியிடங்களுக்கு 13,958 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தின் 11 தாலுகாக்களிலும் உள்ள 22 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இதில், 11,265 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2,693 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வுக்கு பின் வரும் 16 முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் சைக்கிள் ஓட்டுதல் உட்பட பல தகுதிகள் நேர்காணல் செய்யப்படும்.

இந்நிலையில், தெற்கு தாலுகாவுக்கான தேர்வு, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி மையத்தில் நடந்தது. இந்த மையத்திற்கான வினாத்தாள் நேற்று லீக் ஆனதாக தகவல் பரவியது. இதுகுறித்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவின் படி, வருவாய்த் துறையினர் விசாரித்தனர். தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கசிந்தது உண்மை எனத் தெரிய வந்ததால், பொறுப்பாளரான தெற்கு தாசில்தார் கல்யாணசுந்தரம், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில், தெற்கு தாலுகாவிற்கு வட்டாட்சியராக முத்துப்பாண்டியன் நியமிக்கப்பட்டார்.


Tags : Madurai ,Vattachiyar , Madurai, VAO, Exam, Answer Sheet, League, Vatachyar, Change
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...